5 months ago by Parliament Research Team under in විශ්ලේෂණ

ஜனாதிபதித் தேர்தல் அண்மித்துள்ளது. வெற்றியாளர் யார் என தெரிவிக்கும் பல்வேறு கருத்துக்கணிப்புக்களின் முடிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அத்தகைய கருத்துக்கணிப்புக்கள் பற்றியது தான் இந்தக் கட்டுரை. இக்கட்டுரையானது குறித்த கருத்துக்கணிப்புக்களின்; நம்பகத்தன்மை பற்றியதாகும். இந்த கட்டுரையினூடாக எதிர்காலத்தில், ஒரு கருத்துக்கணிப்பொன்றின் முடிவுகளை நீங்கள் நம்புவதாயின், அதில் குறிப்பிடப்பட வேண்டிய நான்கு விடயங்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். கருத்துக்கணிப்புக்களில் இவ்விடயங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றால், அதைப் பகிர்வதற்கு முன்பு இருமுறைகள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

முதலாவதாக, குறித்த கருத்துக்கணிப்பிற்கு மாதிரிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறியவேண்டும். முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனவா என சிந்திக்க வேண்டும்.

இலங்கையை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் கருத்துக்கணிப்புகளைக் கருத்திற்கொள்ளும்போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் இது பிரதானமான ஒன்றாகும். இதற்குக் காரணம், ஒரு மாதிரியைத் தேர்ந்தெடுக்க பல குறுக்குவழிகள் உள்ளன. கணக்கெடுப்பின் அடிப்படையிலான மாதிரி தோராயமாக (சயனெழஅ) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய கருத்துக்கணிப்புக்கள் மிகவும் நம்பகதன்மையுடையதாக காணப்படும். எழுமாறாக மாதிரிகளை தெரிவு செய்யும் போது, கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படும் நாட்டிலுள்ள அனைவருக்கும் பதில்களை வழங்குவதற்கான சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில், மாதிரிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காணப்படுகின்றது. உதாரணமாக - இணையத்தள கருத்துக்கணிப்பில் இந்த சம வாய்ப்பு அம்சம் இல்லை. இணைய வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இதனை அணுகுவதற்கு வாய்பு கிடைக்கின்றது.

இரண்டாவதாக, தவறுகளுக்கான விளிம்பு மற்றும் மாதிரிகளின் அளவு என்ன?

கருத்துக்கணிப்பு என்பது கணக்கெடுப்பு அல்ல. அதாவது கணக்கெடுப்பில் கணித ரீதியாக மதிப்பிடக்கூடிய ஒரு பிழை விளிம்பு எப்போதுமே காணப்படுகிறது. ஒரு நம்பகமான கணக்கெடுப்பு ஒவ்வொரு முறையும் பிழையின் விளிம்பை பிரதிபலிக்கும் இரண்டு எண்கள் இருக்கும். முதலாவது பிழை விளிம்பு. இரண்டாவது நம்பிக்கை நிலை. வெரிட்டே ரிசர்ச் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அதில் பிழை விளிம்பு ±-3மூ ஆகவும் மற்றும் நம்பிக்கை நிலை 95மூ சதவீதமாகவும் காணப்பட்டன. பதிலளித்தவர்களில் 30மூ பேர் ஒரு கேள்விக்கு 'ஆம்' என்று பதிலளித்தால், 27-33மூ (±-3மூ) மக்கள் அதே பதிலைக் கொடுப்பார்கள் என்று 95மூ நம்பிக்கை உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும்;. ±-5மூ பிழை விளிம்பை பராமரிக்கும் தேர்தல் கணக்கெடுப்புகளும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நம்பிக்கை நிலை 95மூ இற்கும் குறைவாக இல்லை என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மாதிரி அளவைப் பொறுத்தவரை, முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியில் பிழை விளிம்பு ±-3மூ மற்றும் 95மூ நம்பிக்கை அளவை பராமரிக்க, மாதிரி அளவு குறைந்தது 1,000 பேருக்கு சற்று அதிகமாக இருத்தல் வேண்டும். இது இலங்கையில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கான அளவுகளாகும். இதனால்தான் மாதிரி அளவு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும். மாதிரி அளவுடன் பிழை விளிம்பை மற்றும் நம்பிக்கை அளவை ஒப்பிடுவது கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்கும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் - இவை அனைத்தும் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்ற முதல் புள்ளியைப் பொறுத்ததாகும்.

மூன்றாவதாக, கேள்விகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன?

கேள்வியை வடிவமைத்து, அந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்புகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதனை பார்ப்பதே இதன் நோக்கமாகும். கேள்வியின் தன்மையைப் பொறுத்து பதில் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, 'நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள்?' அல்லது 'நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்த திறன் அல்லது தகுதி யாருக்கு உள்ளது?' இவ்வாறு கேற்கப்பட்டால், இக் கேள்விகளுக்கான பதில்கள் ஒன்றுடன் ஒன்று மிகவும் வித்தியாசமானதாக இருக்கலாம்.

பதிலளிப்பதற்கான வாய்ப்புகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதும் முக்கியம். ஒரு கணக்கெடுப்பு வெறுமனே ஒரு பட்டியலாக பதிலளிப்பதற்கான வாய்ப்புகளைக் குறிக்கலாம் அல்லது அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றின் நேர்மறை அல்லது எதிர்மறை விளக்கத்தை அவர்களுக்கு வழங்கலாம். இந்த இரண்டாவது வகையில், பதிலளிப்பவர் பொருத்தமான விளக்கத்தின் அடிப்படையில் தனது பதிலை வழங்க தூண்டப்படலாம். உதாரணமாக - முதல் தேர்வு - ஓ என்ற நபர் என்றால் அனுபவம் காணப்பட்டிருக்கும். இரண்டாவது தேர்வு - லு என்றால் அவருக்கு ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றம்ற காணப்படலாம்.

கணக்கெடுப்பு நடத்தப்பட்ட காலகட்டத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால், கேள்வி கேட்கப்பட்ட திகதியின் அடிப்படையில் பதில்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு தேர்தல் தொடர்பான கேள்விக்கான பதில் கேள்வி நேரத்தில் நடந்த ஒரு பெரிய அளவிலான ஊழல் சம்பவத்தைப் பொறுத்து அல்லது மறுபுறம், பொருளாதார ரீதியாக சாதகமான சூழ்நிலை ஃ கட்டுரையைப் பொறுத்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம்.

நான்காவது: கணக்கெடுப்பு ஒரு பொறுப்பான நிறுவனத்தால் நடத்தப்பட்டதா?

சமீபத்தில் பகிரப்பட்ட பல கணக்கெடுப்பு அறிக்கைகள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் எவ்வித தகவலையும் பார்க்க முடியவில்லை. அவற்றில் சில அறிக்கைகளில் சந்தேகத்திற்குரிய மற்றும் பொது அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது, ஏனைய சந்தர்ப்பங்களில், சமூகத்தின் நன்கு அறியப்பட்ட முக்கிய நபர்கள் குறித்த முடிவுகளுக்கு பொறுப்பேற்கவோ அல்லது அவர்கள் அதற்காக முன்வருவதோ இல்லை. இதுபோன்ற கருத்துக்கணிப்புக்களை நம்ப முடியாது.

கணக்கெடுப்பு பொறுப்புக்கூறக்கூடிய ஒரு அமைப்பினால் தான் நடத்தப்பட்டது என்பதை அடையாளம் காண நிறுவனத்தின் சின்னம் கணக்கெடுப்பு அறிக்கையில் உள்ளதா என்பதைக் கண்டறிவது மட்டும் போதுமானதாக அமையாது. தேவைப்பட்டால் சின்னங்களை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பொறுப்பான அமைப்பாக இருப்பின், அவ் அமைப்பு, ஒவ்வொரு முறையும் அந்த அமைப்பின் கீழ் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தகவல்களை அதன் வலைத்தளத்தில் அல்லது சமூக ஊடக தளங்களில் பதிவேற்றம் செய்ய தவறுவதில்லை.

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்துடன், இப்போது ஒரு படத்தை எடுத்து விரும்பிய முடிவைக் காண்பிக்கும் வகையில் அதை மறுசீரமைக்க முடியும். எனவே, 'சமீபத்திய ஆய்வின் தகவல்' என்று கூறப்படும் இதுபோன்ற படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக்கூடாது. செய்ய வேண்டியதெல்லாம், கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களுடன் இணைப்புகளைப் பகிர்வது அல்லது அவை வெளியிடப்பட்ட சமூக ஊடக தளங்களில் தொடர்புடைய இடுகைகளை பகிர்வதாகும். அவை அனைத்தும் நம்பத்தகுந்த ஆதாரங்களாகவும் இருக்க வேண்டும்.

4 கேள்விகளையும் மீண்டும் நினைவூட்டுவோம்

1. மாதிரி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது. முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா?

2. பிழை விளிம்பு மற்றும் மாதிரி அளவு என்ன?

3. கேள்வி எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது?

4. கணக்கெடுப்பானது பொறுப்புக்கூறக்கூடிய ஒரு அமைப்பினால் தான் நடத்தப்பட்டதா?

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அல்லது பதில்களைப் பெறக்கூடிய வகையில் கருத்துக்கணிப்பு அறிக்கை உங்களிடம் இல்லையென்றால், அதை வேறொருவருடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு இருமுறை சிந்தியுங்கள். உங்களை நீங்களே வினவி நம்பிக்கையை நிலைநாட்டும் வரை அதை வேறொருவரிடம் பகிர்ந்துகொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.