ஹன்ஸாட் ஒன்றை தரவிறக்கம் செய்யவும்
‘வெரிடே ஆய்வு’ வடிவமைத்த கோவைப் படுத்தும் முறை வழிகாட்டலின் பிரகாரம் (FAQ 1ஜ பார்க்க) ஹன்ஸாடில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் ஆராய்க.
பதிவுகளை கணணி முறைக்குள் உட்புகுத்தி, பெருக்கல் நேரம் என்ற கோற்பாட்டின் அடிப்படையில் ‘வெரிடே ஆய்வு’ கணக்கிட்டுள்ள புள்ளிகளை பிரயோகப்படுத்துக (FAQ 5ஜ பார்க்க).
Manthri.lk இணையத்திற்குச் சென்று அதி நவீன தரப்படுத்தளைப் பார்க்க.
ஓவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் (MP) பாராளுமன்றத்தில் செய்யும் ஓவ்வொரு பங்களிப்பிற்குமான விநேட அடையாளக் குறி உள்ளது. பாராளுமன்ற அமர்வு இருக்கும் ஒவ்வொரு தினத்திலும் பெருமளவிலான கூற்றுக்கள் அங்கு கூறப்படுகின்றன. ஒரு ஹன்ஸாட்; சுமாராக 90 பக்கங்களைக் கொண்டது. ஆகவே நாங்கள் கீழ் கண்ட விதத்திலான கூற்றுக்களை மாத்திரமே பதிவிலெடுக்கிறோம்:
(i) 5 வரிகளுக்கு கூடுதலானவைகள்
(ii) 5 வரிக்கு குறைந்த ஆனால் ஆயுரைஃநடவடிக்கை முறையிலானவைகள்
(iii) குறுக்கீடலான அல்லது அகற்றப்பட்டவைகள்
ஓவ்வொரு கூற்றும் பங்களிப்பு முறை (உதாரணம் - எழுத்தலான கேள்வி, ஒழுங்குப் பிரச்சனை), தலைப்பு (பொருளாதார அபிவிருத்தி, விவசாயம், மீள்குடியேற்றம போன்றவைகள்), விவாத வகை (சட்ட மூல விவாதம், ஒத்திவைப்புப் பிரேரணை போன்றவைகள்) மற்றும் பங்களிப்பு செய்யப்பட்ட மொழி ஆகிய அடிப்படையில வகைப்படுத்தப்பட்டதாகும். இன்னும் பங்களிப்பு முறைக்கு ஏற்றாற் போல் அப்பங்களிப்பு ஹன்ஸாடில் எத்தனை வரிகளை கொண்டுள்ளது என்ற எண்ணிக்கையையும் நாம் பதிவிடுகிறோம். தற்பொழுது இப்பணி கைப்பாடாகவே நடைபெறுகிறது, ஆனால் நிர்வாக பலுவை குறைக்கக் கூடிய, கோவைப் படுத்தம் தனி நபர்களின் நேரத்தை இன்னும் பயனுள்ளதாக்கும் தன்னியக்க முறை ஒன்றை நாம் வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம்.
அது பாராளுமன்ற செயற்பாடுகளை நாம் பிரித்து வகுத்திருக்கும் 39
வகையிலான தலைப்புக்களைக் கொண்ட ஒரு பட்டியலாகும். அவற்றில் சில வகையிலான தலைப்புக்களாவன:
1 - எழுத்து மூலமான கேள்விகள்
2 - எழுத்து மூலமான கேள்விகள் - விடைகள்
3 - எழுத்து மூலமான கேள்விகள் - தொடரும் கேள்விகள்
4 - தொடரும் கேள்விகள் - விடைகள்
5 - எழுத்து மூலமான விடைகள்
6 - சட்ட மூலம் ஃ ஒழுங்குவிதி ஃ கட்டளை ஃ நிருவாகம்
7 - சட்ட மூலம் ஃ ஒழுங்குவிதி ஃ கட்டளை ஃ விவாத வாய் மூல பங்களிப்பு
8 - ஒழுங்குப் பிரச்சனை - தொழில்நுட்பஃநடவடிக்கைமுறைச் சார்
9 - ஒழுங்குப் பிரச்சனை - ஏனையவை
10 - ஒத்திவைப்புப் பிரேரனை - வாய் மூல பங்களிப்பு
11 - மனுக்கள்
12 - குறுக்கீட்டு பங்களிப்பு
13 - ஆகற்றப்பட்ட கூற்று
14 - வாய் மூல பங்களிப்பு
பாராளுமன்ற விவாதத்தின் போது ஆயுரையற்றதான, விவாதத்திலிருந்து திசைதிருப்பும்படியான அடிப்படையில் இடையூறு செய்வது குறுக்கீட்டு பங்களிப்பு என வகைப்படுத்தப்படும். பாராளுமன்றத்தின் சட்டவாக்க தொழிற்பாட்டை ஸ்தம்பிதமடையச் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவதே இதன் குறிக்கோளாகும். தவறான நேரத்தில், காத்திரமான கருத்தை எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை தண்டிப்பதல்ல இதன் குறிக்கோள்.
சபாநாயகர் விவாதத்தை இடை நிறுத்தச் செய்யும்படியாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒழுங்குப் பிரச்சனை ஒன்றை எழுப்பும் அதே நேரம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை அடிப்படையில் மற்றைய பாராளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பு நடைமுறை குறைபாடானது என்பiதுபற்றி எதுவும் கூறாமல் குறுக்கிடுவது ‘ஒழுங்குப் பிரச்சனை – ஏனையவை’ எனப்படும். ஒழுங்குப் பிரச்சனைகள் எப்படி தப்பாக பயன்படுத்தப் படுகிறது என்பதை அறியவே இது கேவைப் படுத்தப்பட்டுள்ளது. தனது முறை வரும் முன்னரே ஒரு பேச்சை இல்லையேல் கருத்தை தெரிவிக்கவோ அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பேச்சின் நடுவே அவரை வழி மறிக்கும் கருவியாகவே இந்த முறை கணிக்கப் படுகிறது.
வாய் மூல பங்களிப்பு, சபை ஒத்திவைப்பு நேர மனு போன்ற வேளைகளில் எழுத்து மூல கேள்வி, அதற்காக எடுக்கும் நேரம் போன்ற விடயங்களில் அரசியல் அரங்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணக்கெடுப்பு செய்து உகந்த பெருக்கத்தக்க நேரப் புள்ளிகளை நாம் கணக்கிட்டோம். இந்த தேடுதளிலிருந்து எமது ஒவ்வொரு பங்களிப்பு முறைக்கான மதிப்பீட்டைத் தரக்கூடிய புள்ளிகளுக்கான வழிக்காட்டியை உறுவாக்கினோம். உதாரணமாக ஒவ்வொரு எழுத்திலான கேள்விகளும் 30 நிமிட பெருக்க நேரத்திற்கான புள்ளியை பெரும். இந்த புள்ளியிடும் முறை எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான, தன்னியக்க ப்படையிலான வகையில் செயல்படுத்தப்படுவதால் தனிப்பட்ட பக்கச்சார்ப்புகளுக்கு இம்முறைமையில் இடம் கிடையாது.
பதின் ஐந்து முக்கிய பிரதான தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 51
தலைப்புக்கள் உள்ளன. நீங்கள் இணையத்தின் தலைப்பு பகுதியை
பார்வையிட்டால் கீழ் கண்ட 15 பிரதான தலைப்பக்களை அவதானிக்கலாம்:
1. விவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி
2. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்
3. நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம்
4. வர்த்தகம் மற்றும் தொழில் துறை
5. வர்த்தகம் மற்றும் தொழில் துறைநலனோம்புகை மற்றும் சமூக சேவை
6. தேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு
7. நீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்
8. பொருளாதாரம் மற்றும் நிதி
9. கல்வி
10. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு
11. தொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி
12. ஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்
13. சுகாதாரம்
14. நகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து
15. உரிமை மற்றும் பிரதிநிதித்துவம்
பாராளுமன்ற உறுப்பினர்களால் கலந்துரையாடப்படும் விடயங்களை நாம் பதிய வேண்டும் என்பது manthri.lk யின் ஆய்வு வெளிப்பாட்டின் அடிப்படையாகும். 42 தரமான தலைப்பக்கள் இருக்கின்றபடியால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பீட்டு ஆய்வுக்கு உகந்ததாக அமையக்கூடிய சிறந்த தரப்படுத்தலை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பிரதான 3 தலைப்புக்கள் பயன்மிக்கதாகும் என நாம் உணர்ந்தோம்.
ஓவ்வொரு தலைப்புக்கும் ‘பங்களிப்பற்றது’ என்ற பட்டியல் உள்ளது. குறிப்பிட்ட தலைப்புககளு;குள் எந்த பங்களிப்பும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இதில் அடங்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக பங்களிக்வேண்டும் என நாம் நம்புகிறோம். அவர்களது தர அடிப்படையிலான பங்களிப்பை எமக்கு கணிக்க முடியாவிட்டாலும் சட்டவாக்கத்தின் பங்குதாரிக என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமான நேர பயன்பாட்டில் அவர்களது முயற்சியை எமக்கு கணிக்க முடியும். பாராளுமன்றத்தின் வெளிப்படை தன்மை காரனமாக அதன் உறுப்பினர்களுக்கு புள்ளியிட்டு தரப்படுததுவதன் மூலம் ஊடக வெளிப்பாடு போன்ற விடயங்களின் ஊடாக உண்மையாக உழைக்கும் உறுப்பினர்களுக்கு சன்மானமளித்து மற்றவர்களை முன்னேறும்படி ஊக்குவிக்கலாம்.
உயர்ந்த தரம் என்பது குறிப்பிட்ட தலைப்புக்காக அல்லத பொதுவாக (ஆக்கப்பூhவமான நேர பயன்படுத்தல் மூலம்) உயர் புள்ளிகளை பெற்றிருப்பது என்பதாகும். இது சிறந்த தரத்தின் புள்ளி அல்ல, ஆனால் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பூர்வமாக செலவிட்ட நேரத்தை எடுத்துக் காட்டும்.
ஓவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் குறிப்பிட்ட தலைப்பில் பெற்றிருக்கும் புள்ளியை இது குறிக்கும். உயர்ந்த தரத்திற்கு வரும் உறுப்பினர் 100 புள்ளிகள் பெறுவார். பச்சை, செம்மஞ்சல் மற்றும் சிகப்பு குறிகள் முறையே 70, 30 - 69, 0 - 29 ஆகிய புள்ளிகளை குறிக்கும்.
நாம் பாராளுமன்ற உறுப்பினர்களை தரப்படுத்தவில்லை. நாம் பொது தரவுகளை ஆய்விலெடுத்து அவதானத்தில் எடுக்கப்படாத பாராளுமன்ற நடைமுறைகளை பற்றிய வெளியீடுகளையே செய்கிறோம்.
ஓவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்த 50 பங்களிப்புகளின் அடிப்படை செயற்பாடுகள் பற்றிய தரவை நாம் கொடுத்துள்ளோம். குறிப்பிட்ட பங்களிப்பு பற்றி இடம்பெற்றுள்ள ஹன்ஸாடின் சரியான இடத்தையும், முழு ஹன்ஸாடையும் தரவிறக்கம் செய்யக்கூடிய வசதியையும் கொடுததுள்ளோம். இதன் மூலம் நீங்கள் எமது வெளியீட்டை சரி பார்த்துக்கொள்ளலாம்.
சமூகக் காரியத்திறகான துணிகர மூலதனத்தினாலேயே எமது இனையத்தலம் செயற்கடுகிறது.
[email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் எமது குழு கூடிய சீக்கிரம் பதில் தரும்.
Please submit your details to subscribe for Manthri.lk newsletter.