இந்த ''IMF கண்காணிப்பான்'' எனப்படுவது இலங்கை அரசாங்கம் 2023ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்துடன் செயற்படுத்த இணங்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் ஒரு ஒன்லைன் சாதனமாகும். இது மாதாந்தம் இற்றைப்படுத்தப்படுவதுடன் கடைசியாக 2023 மார்ச் 31 அன்று இற்றைப்படுத்தப்பட்டது.
Proposed Commitments on Expenditure Arrears
Proposed Commitments on External Payment Arrears
Proposed Commitments on Corporate Income Tax
Proposed Commitments on Credit to Government
Proposed Commitments on Debt Sustainability
Proposed Commitments on Excises Customs Duties
Proposed Commitments on Financial Sector
Proposed Commitments on Fiscal Reforms
Proposed Commitments on Fuel and Electricity - these refer to the obligations of Ceylon Petroleum Corporation (CPC) and Ceylon Electricity Board (CEB) to supply fuel and electricity at prices below cost-recovery levels.
Proposed Commitments on Governance
Proposed Commitments on Import Restrictions
Proposed Commitments on Inflation
Proposed Commitments on Monetary Rate Policies
Proposed Commitments on Net official International Reserves
Proposed Commitments on Other Taxes
Proposed Commitments on Personal Income Taxation on Capital Income
Proposed Commitments on Personal Income Taxation on Labour Income
Proposed Commitments on Primary Balance - Primary balance refers to the difference between a government's total revenues and its total non-interest expenses
Commitments that had to be met before the IMF board approval
Proposed Commitments on Property and Wealth Taxes
Proposed Commitments on Social Net Reforms
Proposed Commitments on Social spending on, (1) Samurdhi cash transfers; (2) assistance to the elderly (over 70 years of age); (3) allowance for disabled people; and (4) financial support for kidney patients.
Proposed Commitments on State Owned Enterprice Reforms
Proposed Commitments on Tax Revenue
Proposed Commitments on Treasury guarantees - A guarantee of a debt refers to any explicit legal obligation of the central government to service such a debt in the event of nonpayment by the recipient. Treasury guarantees exclude letters of comfort.
Proposed Commitments on Value Added Tax
செலவை ஈடுசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 எரிபொருள் விலைச்சூத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாதாந்த சில்லறை எரிபொருள் விலை சரிசெய்தலை தானியக்கமாக்க அமைச்சரவை அங்கீகாரம்.
23-May-22
திட்ட வரையறைகளுக்கு ஏற்ப, 2023ம் ஆண்டில் வருமானத்தை அதிகரிக்க உதவும் வருமான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்.
30-May-22
சுற்றுலா தொடர்பான சேவைகளுக்கான பூச்சிய-மதிப்பீட்டு பெறுமதி சேர் வரியை அகற்றுதல்.
01-Jun-22
திட்ட வரையறைகளுக்கு ஏற்ப 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்.
04-Jul-22
திட்ட வரையறைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட 2022 வரவு செலவுத்திட்டத்திற்குப் பாராளுமன்ற அங்கீகாரம்.
22-Aug-22
நிலையான பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்துதல்.
01-Sep-22
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து துறை சார் விலக்குகள் மற்றும் குறைக்கப்பட்ட கூட்டிணைவு வருமான வரி விகிதங்களை நீக்கி கூட்டிணைவு வருமான வரியை 30 சதவீதமாக உயர்த்துதல்.
01-Oct-22
ஆண்டொன்றுக்கு ரூ.120 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் மீது 2.5% “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” வரியை அறிமுகப்படுத்துதல்.
01-Oct-22
VAT பதிவுசெய்வதற்கான வரம்பை ரூ.80 மில்லியனாகக் குறைப்பதுடன் மொத்த மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளுக்கும் அதே வரம்பை நிர்ணயித்தல்.
01-Oct-22
இலங்கை மத்திய வங்கியின் நெருக்கடி முகாமைத்துவ அதிகாரங்களின் முக்கிய கூறுகளை வலுப்படுத்த வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
22-Nov-22
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் நவம்பர் 2019ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுடனான புதிய மத்திய வங்கி சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
19-Dec-22
மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் வரியை 20 சதவீதத்தால் அதிகரித்தல்.
01-Jan-23
மொ.உ.உற்பத்தியில் 0.3 சதவீதத்தை ஈட்டும் வகையில் எரிபொருள் வரியை அறிமுகப்படுத்துதல்.
01-Jan-23
பங்கிலாபங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும் இறுதி அல்லாத நிறுத்திவைத்தல் வரியை மீள அறிமுகப்படுத்துதல். வட்டி வருமானத்திற்கு தனிக் கொடுப்பனவை அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்தல்.
01-Jan-23
பங்கிலாபங்களுக்கான இறுதியான நிறுத்திவைத்தல் வரியை அறிமுகப்படுத்துதல்
01-Jan-23
தனிநபர் வருமான வரி முறைமை கட்டமைப்பில் முற்போக்கான சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துதல். ஆண்டொன்றுக்கு வரி செலுத்தத் தேவையற்ற வரம்பாக ரூ.1,200,000 நிர்ணயித்தல் மற்றும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு ரூ.500,000ற்கும் தனிநபர் வருமான வரி விகிதத்தை 6 சதவீதப் புள்ளிகளால் அதிகபட்ச வரம்பான 36 சதவீதம் வரை அதிகரித்தல்.
01-Jan-23
ஆண்டுக்கு ரூ.1,200,000 எனும் வரி செலுத்தத் தேவையற்ற வரம்பைத் தாண்டும் அனைத்து வரிசெலுத்துநர்களின் தொழில் வருமானம் (APIT/PAYE) மீது நிறுத்திவைத்தல் வரியைக் கட்டாயமாக்குதல்.
01-Jan-23
தொழில் வல்லுநர்கள் போன்ற தனிநபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் செலுத்தப்படும் சேவைக் கொடுப்பனவுகளுக்கு நிறுத்திவைத்தல் வரியை 5 சதவீதமாக விதித்தல்.
01-Jan-23
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான (condominium) பெறுமதிசேர் வரி விலக்கை அகற்றுதல்.
01-Jan-23
அரையாண்டு செலவு மீட்பை அடிப்படையாகக் கொண்ட மின்சார விலை சரிசெய்தலை தானியக்கமாக அமைச்சரவை அங்கீகாரம்.
09-Jan-23
மார்ச் 2023க்குள் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் வருடாந்தப் பணவீக்கம் 55 - 49 சதவீதம்.
01-Mar-23
உண்மையான கொள்கை விகிதங்கள் முன்னேற்றகரமான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த கொள்கை வட்டி விகிதங்களை 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்தல்.
01-Mar-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் காலக்கெடு அடிப்படையில் வங்கித் துறையை மதிப்பிடுவதற்கு சுயாதீன நிறுவனத்தை இலங்கை மத்திய வங்கி பணியமர்த்துதல்.
01-Mar-23
மாதாந்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சரிசெய்தல்களுடன் சில்லறை எரிபொருள் விலைகளை அவற்றின் செலவை ஈடுசெய்யும் அளவிற்கு நிர்ணயிப்பதுடன் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வரவு செலவுத் திட்டப் பரிமாற்றல்களுடன் ஏதேனும் எரிபொருள் மானியங்களை வழங்கி ஈடுசெய்தல்.
01-Mar-23
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் (முறையே ஜனவரி 1 மற்றும் ஜுலை 1 அமுலுக்கு வரும் வகையில்) அரையாண்டு சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதிப் பயனர் மின்சாரக் கட்டண அட்டவணையை அதன் செலவை ஈடுசெய்யும் அளவிற்கு (இறுதி நுகர்வோாரின் வெவ்வேறு வகைகள் அனைத்திற்கும்) சரிசெய்தல், இலங்கை மின்சார சபை அக்டோபர் மாத இறுதியிலும் (ஜனவரி கட்டணத் திருத்தங்களுக்கு) மற்றும் ஏப்ரல் மாத இறுதியிலும் (ஜுலை கட்டணத் திருத்தங்களுக்கு) இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கட்டணத் திருத்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல், மீதமுள்ள மானியங்களுக்கு வரவு செலவுத் திட்டப் பரிமாற்றத்தின் ஊடாக மின்சாரத் துறைக்கு இழப்பீடு வழங்குதல்.
01-Mar-23
வெளிப்படைத்தன்மைக்குரிய இணையதளம் ஒன்று உருவாக்கப்படவில்லை. இருப்பினும், இரண்டு ஆவணங்கள் மார்ச் திறைசேரியின் இணையதளத்தில் 31க்குப் பின்னர் பதிவேற்றப்பட்டுள்ளன. ஒன்று, முதலீட்டு சபை மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியலும், இரண்டாவது, சொகுசு வாகன இறக்குமதியில் வரி விலக்கு பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலுமாகும். மேலும், கொள்முதல் தொடர்பான இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் சுகாதார அமைச்சின் 7 சந்தர்ப்பங்களில் கொள்முதல் செய்யப்பட்டவற்றின் அளவு மற்றும் அதற்காக செலுத்தப்பட்ட தொகை பட்டியலிடப்பட்டுள்ளது. கொள்முதல் ஒப்பந்தத் திட்டங்களுக்கான முன்வரைவு எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆதாரம்: https://www.treasury.gov.lk/web/publications https://www.treasury.gov.lk/api/file/f2d9b05e-bc9d-4c24-a234-2e631dfc5169 https://www.treasury.gov.lk/api/file/8cebada0-8c18-4c77-b2b9-7a3617a6e456 https://promise.lk
30-Apr-23
மார்ச் 7 ஆம் திகதி ஒரு சட்டமூலம் வெளியிடப்பட்டது, எனினும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை.
more30-Apr-23
ஏப்ரல் 4 ஆம் திகதி ஒரு சட்டமூலம் வெளியிடப்பட்டது, எனினும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை.
more30-Apr-23
நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்திற்கும் அந்தக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான புதிய அளவுகோல்களைப் பயன்படுத்துவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரம்.
31-May-23
மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான கலால் தீர்வைகளுக்கான இரண்டாவது அதிகரிப்பு மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுதல்.
30-Jun-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் வங்கிச் சட்டத்தை முழுமையாக மீளத்திருத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம்.
30-Jun-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் இருப்புநிலைகளை மறுசீரமைப்பதற்கான விரிவான மூலோபாயத்திற்கு (தெளிவான காலக்கெடு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தல்) அமைச்சரவை அங்கீகாரம்.
30-Jun-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான பிரகடனத்திற்கு ஏற்ப புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குதல், அதில் இழந்த சொத்துக்களை மீளப்பெறுவதற்கான விதிகளும் உள்ளடக்கப்படும்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் வருடாந்தப் பணவீக்கம் 34 - 28 சதவீதம்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் தேறிய சர்வதேச அலுவல்சார் ஒதுக்குகள் குறைந்தபட்சம் -$2,830 மில்லியன்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் ஆரம்ப பற்றாக்குறை குறைந்தபட்சமாக மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதம் (-ரூ 113 பில்லியன்).
30-Jun-23
ஜுன் 2023க்குள் சமூக செலவிடல் மொ.உ.உற்பத்தியின் 0.2 சதவீதம் (ரூ.70 பில்லியன்)
30-Jun-23
ஜுன் 2023க்குள் மொ.உ.உற்பத்தியில் 4.3 சதவீதமாக (ரூ.1,300 பில்லியன்) வரி வருமானம்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் திறைசேரி உத்தரவாதங்கள் மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதம் (ரூ.1,700 பில்லியன்)
30-Jun-23
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான வணிகம் சாராத கடமைப்பாடுகளுக்கான செலவு (தேறிய அரசாங்கப் பரிமாற்றல்கள்) ரூ. 0 பில்லியன்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தேறிய கடன் அதிகபட்சமாக ரூ.2,890 பில்லியன்.
30-Jun-23
ஜுன் 2023ல் செலவின நிலுவைகள் அதிகபட்சமாக ரூ.0 பில்லியன்.
30-Jun-23
ஜுன் 2023க்குள் நிதியல்லாத பொதுத்துறை மற்றும் மத்திய வங்கியின் புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் ரூ.0.
30-Jun-23
மீதமுள்ள 19 முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் கணக்காய்வு செய்யப்பட்ட 2021க்கான நிதிநிலை அறிக்கைகளை வெளியிடுவதுடன் 2022ம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளையும் வெளியிடுவதை உறுதிசெய்தல்.
30-Jun-23
திட்டத்தின் காலப்பகுதியில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தல்.
30-Jun-23
வங்கிக் கட்டமைப்பு மூலதனம் மற்றும் FX பணப்புழக்க பற்றாக்குறை ஆகியவற்றைச் சரிசெய்யவும் சாத்தியமற்றது என மதிப்பிடப்படும் வங்கிகளில் தலையீடு செய்வதற்கும் திட்ட வரைபை இலங்கை மத்திய வங்கி உருவாக்குதல்.
31-Jul-23
திட்ட வரையறைகளுக்கு ஏற்ப, 2024ம் ஆண்டில் வருமானத்தை அதிகரிக்க உதவும் வருமான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்.
31-Jul-23
செப்டெம்பர் 2023க்குள் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் வருடாந்தப் பணவீக்கம் 34 - 28 சதவீதம்.
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் தேறிய சர்வதேச அலுவல்சார் ஒதுக்குகள் குறைந்தபட்சம் -$2,068 மில்லியன்.
30-Sep-23
ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பை (ITMIS) அமுல்படுத்துவதை நிறைவுசெய்வதுடன் அதனை 220 முகவரகங்களுக்கு (தேசிய வரவு செலவுத் திட்ட நிறைவேற்று முகவரகங்களுக்கு) விரிவுபடுத்துதல்.
30-Sep-23
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை மதிப்பிடுவதற்காக நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை மதிப்பாய்வு செய்த IMF தலைமையிலான தொழில்நுட்ப உதவி பணியின் அறிக்கையை வெளியிடுதல்.
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் ஆரம்ப பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் குறைந்தபட்சம் 0.5 சதவீதம் (-ரூ 160 பில்லியன்).
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் சமூக செலவிடல் மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதம் (ரூ.120 பில்லியன்).
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் வரி வருமானம் மொ.உ.உற்பத்தியின் 6.9 சதவீதம் (ரூ.2,100 பில்லியன்).
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் திறைசேரி உத்தரவாதங்கள் மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதம் (ரூ.1,700 பில்லியன்).
30-Sep-23
Cost of Non-Commercial Obligations for Fuel and Electricity (Net of Government Transfers) at LKR 0 Bn
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தேறிய கடன் அதிகபட்சமாக ரூ.2,840 பில்லியன்.
30-Sep-23
வருமானங்கள், செலவினங்கள் மற்றும் நிதிவழங்குதல் மூலமான மாதாந்த காசுப் பாய்ச்சல்களை அடுத்த மாதத்தின் மூன்றாவது வேலை நாளுக்குள் அரச கணக்குகள் திணைக்களத்தால் அறிக்கையிடுதல்.
30-Sep-23
செப்டெம்பர் 2023ல் செலவின நிலுவைகள் அதிகபட்சமாக ரூ.0 பில்லியன்.
30-Sep-23
செப்டெம்பர் 2023க்குள் நிதியல்லாத பொதுத்துறை மற்றும் மத்திய வங்கியின் புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் ரூ.0.
30-Sep-23
திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்பிற்குப் பின்னர், அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் இருந்தால் அவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐந்தொகையில் இருந்து அரசாங்கத்தின் ஐந்தொகைக்கு மாற்றுதல்.
30-Sep-23
தனியார் மூலங்களில் இருந்து மூலதனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியாத வங்கிகளுக்கு அரசாங்கம் மூலதனத்தை வழங்குவதற்கான அளவு, காலப்பகுதி, கருவிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிதி அமைச்சு தீர்மானித்தல்.
31-Oct-23
திட்ட வரையறைகளுக்கு இணங்க 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முதல் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
31-Oct-23
டிசம்பர் 2023க்குள் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் வருடாந்தப் பணவீக்கம் 18-12 சதவீதம்.
31-Dec-23
டிசம்பர் 2023க்குள் தேறிய சர்வதேச அலுவல்சார் ஒதுக்குகள் குறைந்தபட்சம் -$1,592 மில்லியன்.
31-Dec-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் வங்கிச் சட்டத்தை முழுமையாக மீளத்திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.
31-Dec-23
திட்ட வரையறைகளுக்கு ஏற்ப 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கும் செலவின ஒதுக்கீடுகளுக்கும் பாராளுமன்ற அங்கீகாரம்.
31-Dec-23
IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் வரவு செலவுத்திட்ட உருவாக்கச் செயல்முறை, தொடர்புடைய முகவரகங்களின் பணிகளும் பொறுப்புகளும், தகவல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
31-Dec-23
மின்சார மானியத்தை துல்லியமாக அளவிட பாரிய வழங்கல் பரிமாற்றக் கணக்குகை (BSTA) மேம்படுத்துவதுடன் செலவை ஈடுசெய்வதை அடிப்படையாகக் கொண்ட மின்சாரக் கட்டணம் மற்றும் அரசாங்கத்தின் பரிமாற்றத் தேவையைத் தீர்மானிக்க அதனைப் பயன்படுத்தத் தொடங்குதல்.
31-Dec-23
2023 டிசம்பருக்குள் ஆரம்ப பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் குறைந்தபட்சம் 0.7 சதவீதம் (-ரூ 209 பில்லியன்).
31-Dec-23
2023 டிசம்பருக்குள் சமூக செலவிடல் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதம் (ரூ.187 பில்லியன்).
31-Dec-23
டிசம்பர் 2023க்குள் வரி வருமானம் மொ.உ.உற்பத்தியின் 9.7 சதவீதம் (ரூ.2,940 பில்லியன்).
31-Dec-23
டிசம்பர் 2023க்குள் திறைசேரி உத்தரவாதங்கள் மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதம் (ரூ.1,700 பில்லியன்).
31-Dec-23
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான வணிகம் சாராத கடமைப்பாடுகளுக்கான செலவு (தேறிய அரசாங்கப் பரிமாற்றல்கள்) ரூ. 0 பில்லியன்.
31-Dec-23
டிசம்பர் 2023க்குள் இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தேறிய கடன் அதிகபட்சமாக ரூ.2,740பில்லியன்.
31-Dec-23
சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப பொதுப் படுகடன் முகாமைத்துவ முகவரகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தல்.
31-Dec-23
டிசம்பர் 2023ல் செலவின நிலுவைகள் அதிகபட்சமாக ரூ.0 பில்லியன்.
31-Dec-23
டிசம்பர் 2023க்குள் நிதியல்லாத பொதுத்துறை மற்றும் மத்திய வங்கியின் புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் ரூ.0.
31-Dec-23
மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மற்றும் முதலீட்டுச் சபை சட்டங்களின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளால் விதிக்கப்படும் நேரடிச் செலவுகளை மதிப்பிடத் தொடங்குவதுடன் வெளியிடுதல்.
31-Jan-24
பணவீக்கத்திற்கு ஏற்ப கலால் வரியை தானியக்கமாக சரிசெய்யும் முறையை அறிமுகப்படுத்துதல்.
31-Jan-24
பெரும்பாலான விலக்குகளை இல்லாது செய்வதன் மூலம் பெறுமதிசேர் வரி முறையை மறுசீரமைத்தல்.
31-Jan-24
செல்லுபடியாகும் VAT மீளளிப்புகளை விரைவுபடுத்துவதுடன் SVAT முறையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தல்.
31-Jan-24
ஜனவரி 2024 முதல், தகுதிபெறாத பயனாளிகள் சமுர்த்தி காசுக் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள்.
31-Jan-24
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் (UNCAC) தரநிலைகளுடன் இணங்கும் வகையில் விரிவான சொத்து மீட்பு விதிகள் IMF உத்தியோகத்தர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு குற்றச்செயல்கள் தொடர்பான தனியான வரைபுச் சட்டத்தில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
31-Mar-24
செலவை ஈடுசெய்வதை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் மற்றும் மின்சார விலைத் திருத்தத்திற்கு எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சரைப் பொறுப்பாக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்துதல்.
30-Jun-24
2024 இறுதிக்குள் ஆரம்ப மிகை மொ.உ.உற்பத்தியில் 0.8 சதவீதம்.
31-Dec-24
பொதுப் படுகடன் முகாமைத்துவ முகவரகத்தை உருவாக்குவதை நிறைவுசெய்தல்.
31-Dec-24
தேசிய அளவில் சொத்து வரியை அறிமுகப்படுத்துதல், தொடர்புடைய நிதிப் பரிமாற்றங்களின் மதிப்பாய்வு மற்றும் தேவை ஏற்படின் தொழில்நுட்ப உதவியைக் கோருதல்.
31-Jan-25
வரி செலுத்தத் தேவையற்ற வரம்பு மற்றும் குறைந்தபட்ச விலக்குகளுடன் நன்கொடை மற்றும் பரம்பரை உடைமை வரியை அறிமுகப்படுத்துதல்.
31-Jan-25
2025 இறுதிக்குள் ஆரம்ப மிகை மொ.உ.உற்பத்தியில் 2.3 சதவீதம்.
31-Dec-25
மார்ச் 2023க்குள் தேறிய சர்வதேச அலுவல்சார் ஒதுக்குகள் குறைந்தபட்சம் -$3,188 மில்லியன்.
31-Mar-23
மார்ச் 2023க்குள் ஆரம்ப பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் குறைந்தபட்சம் 0.2 சதவீதம் (-ரூ 56 பில்லியன்).
31-Mar-23
மார்ச் 2023க்குள் சமூக செலவிடல் மொ.உ.உற்பத்தியின் 0.1 சதவீதம் (ரூ.35 பில்லியன்).
31-Mar-23
மார்ச் 2023க்குள் வரி வருமானம் மொ.உ.உற்பத்தியின் 2.1 சதவீதம் (ரூ.650 பில்லியன்).
31-Mar-23
மார்ச் 2023க்குள் திறைசேரி உத்தரவாதங்கள் மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதம் (ரூ.1,700 பில்லியன்).
31-Mar-23
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான வணிகம் சாராத கடமைப்பாடுகளுக்கான செலவு (தேறிய அரசாங்கப் பரிமாற்றல்கள்) ரூ. 0 பில்லியன்.
31-Mar-23
மார்ச் 2023க்குள் இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தேறிய கடன் அதிகபட்சமாக ரூ.2,890 பில்லியன்.
31-Mar-23
மார்ச் 2023ல் செலவின நிலுவைகள் அதிகபட்சமாக ரூ.30 பில்லியன்.
31-Mar-23
மார்ச் 2023க்குள் நிதியல்லாத பொதுத்துறை மற்றும் மத்திய வங்கியின் புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் ரூ.0.
31-Mar-23
அரசுக்குச் சொந்தமான பாரிய இரண்டு வங்கிகள் மற்றும் பாரிய மூன்று தனியார் துறை வங்கிகளின் சொத்தின் தரம் தொடர்பான மதிப்பாய்வை நிறைவுசெய்தல்.
30-Apr-23
Please submit your details to subscribe for Manthri.lk newsletter.