about 8 years ago by Manthri.lk - Research Team under in ஆய்வறிக்கை

இயந்திர இழுவைப்படகினைக் கொண்டு கடலுக்கடியில் மீன்பிடிப்பது  கடல் பரப்பில் கனமான வலைகளை இழுப்பதன்மூலம் பெருந்தொகை கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வiகை மீன்பிடித்தலுக்கான ஒரு விசேட உரிமத்தை  1996 ஆம் ஆண்டின்  மீன்பிடி மற்றும் நீரியல்வள  சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் பெற்றுக்கொள்ளமுடியும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன்  பெப்ரவரி மாதம் 10ம் திகதி  இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கைகளைத் தடை செய்வதற்கான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கைகளைத் தடை செய்வதற்கான இச்சட்டமூலத்தை ஏன் பாராளுமன்றம் சட்டமாக நிரைவேற்றவேண்டும் என்பதற்கான ஐந்து காரனங்கள் இங்கே தரப்படுகின்றன. 

1. இழுவைப்படகு மீன் நடவடிக்கை சூழலை அழிக்கின்றது

உலக வனஜீவராசிகள் நிதிய கூற்றுப்படி, இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கை கடல் வாழ் உயிரினங்களை 'மீள திருத்தியமைக்க முடியாதவாறு அழித்தொழிக்கிறது'.  அழிவடையும் ஆபத்திற்குள்ளாகியிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள்  மற்றும் அரிய பவளப்படிவுகள்  ஆகியவற்றை கொண்டிருக்கும்  நெகிழ்வுத் தன்மைமிக்க சூழலியல் முiறைமைகள்  ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்படுகின்றன. 

2. அது ஒரு வீன்விரயமிக்க மீன்பிடி முறையாகும் 

வழமையாக இயந்திரப்படகுகள்  பிடித்த மீன்களில் 90 வீதமானவற்றை மீண்டும் கடலில் எறிவதனால்  இயந்திர இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கை வி;ரயமிக்கது என்று கடல் பாதுகாப்பு நிறுவகம்  கருத்து தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கத்தைத் தடை செய்வதில் தெளிவான பொருளாதார நன்மைகள் உண்டு. அதன்மூலம் மீன்பிடித்துறையும் இலங்கை பொருளாதாரமும்  நன்மையடையும். ஏனெனில், நீண்ட கால அடிப்படையில் மீன்பிடிக்களம் அதிகம் பேணத்தக்கதாக மாறும். 

 

3. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு அது ஊறு விளைவிக்கிறது

ஓவ்வொரு வாரமும்; ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இயந்திர இழுவைப் படகுகள்; இலங்கைக் கடலில் பாரிய இழுவை வலைகள் கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.  இந்தப் படகுகள்  இலங்கை மீனவர்கள்  இந்த பகுதிகளுக்குச் சென்று தமது வாழ்வாதரத் தொழிலில் ஈடுபடுவதைத்  தடுக்கின்றன. இந்தியப் படகுகள்   இலங்கை மீனவர்களுக்கு பிடிப்பதற்கு  வெகு சிறிது மீன்களையே விட்டுவைத்து மீன் வளங்களை குறைத்தவிடுகின்றன. 

4. அது இராஜதந்திர உறவுகளை பாதிக்கின்றது

எல்லை மீறியமைக்காக இந்திய படகு இயக்கியவர்களை இலங்கை அரசாங்கம் கைதுசெய்தது. இந்தக் கைதுகள் இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளைப் பாதித்துள்ளன. ஏனெனில், இலங்கைக் கடல் பரப்பில் மீன் பிடிப்பதற்கு தமக்கு  பாரம்பரிய உரிமை உண்டென இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  எனினும், இயந்திர படகுகளில் கடலடி மீன்பிடி நடவடிக்கையானது ஒரு பாரம்பரிய மீன்பிடி முறைமையல்ல.  எனவே முழுமையாக அதனைத் தடை செய்வது  'யார் உண்மையான வழக்கப்படி மீன்  பிடிக்கிறார்கள்' என்பதிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடும். ஒரு முழுமையான தடை இந்திய மீனவர்களுக்கு மாத்திரமின்றி இலங்கை மீனவர்களுக்கும் பொருந்துமாகையால், அது நேர்மையானதும் நியாமானதுமாகும். 

5. நாம் வறலாறு படைக்கலாம்

2015 இல் உலகிலேயே இழுவைப்படகு மீன்பிடித்தலிலிருந்து அதன் அனைத்து கடல் திட்டுகளையும் நிரந்தரமாகப் பாதுகாத்த முதலாவது நாடாக சிலி மாறியது.. இந்தோனேசியா, நியூசிலாந்து, பெலிஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இழுவைப்படகு மீன்பிடித்தல்மீது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தடையை விதித்துள்ளன.  அதேபோன்று தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் இந்நடைமுறையின் தீங்கிளைக்கும் தாக்கத்தை குறைப்பதற்காக  வருடாந்த மீன்பிடித் தடைகளை விதிக்கின்றன. இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்யும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டால், ஆசியாவிலேயே  இந்நடைமுறையை முழுமையாக தடைசெய்த முதலாவது நாடாக இலங்கை விளங்கும். இந்தத்தடை  சூழல் பாதுகாப்பில்  இலங்கை ஓர் உலக நாயகனாக உருவெடுப்பதற்கு  பங்களிப்புச் செய்வதோடு, பேணத்தக்க மீன்பிடித்தலுக்கான இலங்கையின் கடப்பாட்டையும் உறுதிப்படுத்தும். 

இக்காரணங்களுக்காக இயந்திர இழுவைப்படகு மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்யும் உத்தேச சட்டமூலத்தை பாராளுமன்றம் நிறைவேற்றவேண்டும். இதனால் எமது சூழல், எமது பொருளாதாரம், எமது உள்ளுர் மீனவர்கள், எமது வெளிநாட்டுறவு மற்றும் வரலாற்றில் எமது இடம் ஆகியன  நன்மையடையும்.