ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான தீர்மானம் (ஊழnஎநவெழைn ழக Pநசளழளெ றiவா னுளையடிடைவைநைள) 2008ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி அமுலிற்கு வந்தது. இம் மாநாடு விஷேட தேவையுடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு போதிய நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிப்படுத்துவதையும் அவர்களது உள்ளார்ந்த கண்ணியத்திற்கு மதிப்பளித்தளையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இலங்கை அரசு CPRD இற்கு இசைவதாக 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி கைச்சாத்திட்டது. இக்கைச்சாத்தின் மூலம் இலங்கை அரசு CPRD இல் எடுத்துரைக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது. இதனால், விஷேட தேவையுடையவர்களின் உரிமையைப் பாதுகாக்குமுகமாக பின்வரும் 4 உரிமைகளை உறுதிப்படுத்த இலங்கை கடமைப்பட்டுள்ளது.
1. சம உரிமைக்கான உத்தரவாதமும், விஷேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் எவ்வகையான பாரபட்டசமான நடவடிக்கைகளிற்கும் உட்படாதிருப்பதற்கான உத்தரவாதமும்
2. அணுகலிற்கான உரிமையும் (Right to Accessibility தனியார் நடமாட்டதிற்கான சுதந்திரமும்
3. கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பிற்கான சுதந்திரம்
4. அரசியல் மற்றும் தனியார் வாழ்வில் ஈடுபடுவதற்கான சுதந்திரம்
இவ்வாக்கம் இலங்கையின் தற்போதைய சட்ட மற்றும் கொள்கை வகுப்புகளில் இவ்வுரிமைகளிற்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்தை மிகச்சுருக்கமாக ஆராய்கின்றது.
1. சம உரிமைக்கான உத்தரவாதமும் விஷேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் எவ்வகையான பாரபட்டசமான நடவடிக்கைகளிற்கும் உட்படாதிருப்பதற்கான உத்தரவாதமும்
CPRD, அதில் கைச்சாத்திடும் தரப்பு விஷேட தேவையுடையவர்கள் (அதாவது அங்கவீனர்கள்) என்ற ரீதியில் காட்டப்படும் பாரபட்ச நடவடிக்கைகள் அனைத்தையும் தடை செய்வதை கட்டாயமாக்;கியுள்ளதுடன் பயனுறுதிமிக்க சம சட்ட உரிமைக்கான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. (உறுப்புரை 5, CPRD)
இலங்கையின் சட்ட யாப்பு குடிமக்களது சமஉரிமையை உறுதிப்படுத்துவதுடன் இன, மத, பால் மற்றும் மொழி அடிப்படையிலான அனைத்து பாரபட்ச நடவடிக்கைகளையும் தடை செய்கின்றது (உறுப்புரை 12). எனினும், தென்னாபிரிக்க சட்டயாப்பில் வழங்கப்பட்டவாறு விஷேட தேவையுடையவர் என்ற அடிப்படையிலான பாரபட்சமின்மைக்கான உரிமையை இலங்கையின் சட்டயாப்பில் வழங்கவில்லை.
2. அணுகலிற்கான உரிமையும் தனியார் நடமாட்டதிற்கான சுதந்திரமும்
CPRD, அதில் கைச்சாத்திடும் நாடுகள் விஷேட தேவையுடையவர்கள் சுதந்திரமாக வாழ்வதனை உறுதிப்படுத்துவதையும், வாழ்வின் அனைத்து பாகங்களிலும் ஈடுபாட்டுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதையும் கடமையாக்கியுள்ளது. அத்துடன் கைச்சாத்திடும் நாடுகள் அவர்களின் ஈடுபாட்டிற்கு தடையாக அல்லது முட்டுக்கட்டையாக உள்ள அனைத்து விடயங்களையும் (உ.ம்.: கட்டடங்கள், பாதைகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிலையங்கள்) அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதனையும் கடமையாக்கியுள்ளது. இவை மாத்திரமல்லாது, விஷேட தேவையுடையவர்களிற்கான துணைத் தொழிநுட்பத்திற்கும் நேரடி உதவிகளிற்கும் வசதியேற்படுத்துவதை CPRD கடமையாக்குகின்றது. (உறுப்புரை 20, CPRD). 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட விஷேட தேவையுடையோர் சட்டமூலத்தின் படி 2009ம் ஆண்டு இறுதியில் அனைத்து பொது இடங்கள் மற்றும் கட்டடங்களும் விஷேட தேவையுடையோரின் பாவனைக்கேற்ற விதத்தில் அமையவேண்டும் எனக் கோருகிறது. எனினும் இதன் முன்னேற்றம் மிகவும் மந்த கதியிலே நடைபெறுகிறது. அத்துடன் பிரய்ல் அச்சிடு இயந்திரம் (braille printer) மற்றும் திரை படிப்பான்கள் (screen readers) போன்ற தேவையான தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் துணைக்கருவிகளின் போதாமை விஷேட தேவையுடையவர்களின் பொது வாழ்வின் அர்த்;தமுள்ள ஈடுபாட்டிற்கான தடையை நீடிக்கச் செய்கின்றது.
3. கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பிற்கான சுதந்திரம்
CPRD விஷேட தேவையுடையவர்கள் பொதுக் கல்வி முறையில் அவர்களது அங்கவீனத்தை அடிப்படையாகக் கொண்டு புறக்கணிப்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றது (உறுப்புரை 24, CPRD). மேலும், விஷேட தேவையுடையவர்கள்; அதியுயர் தரம் மிக்க சுகாதார சேவைகளை எவ்வித பாரபட்சமுமின்றி பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துடன் (உறுப்புரை 24, ஊPசுனு) தொழிற் சந்தையில் அவர்களது பங்கேற்பையும் உறுதி செய்கின்றது (உறுப்புரை 27, CPRD).
1997ம் ஆண்டின் பொதுக் கல்விச் சீர்திருத்தத்தின் படி இலங்கை அரசு 'உள்ளடக்கிய கல்வி' யினை அறிமுகப்படுத்தியது. இக் கொள்கை விஷேட தேவையுடைய பி;ள்ளைகளை சாதாரண மாணவர்களுக்கான வகுப்பறையில் உள்ளடக்குவதற்கு அங்கீகரித்தது. இருந்த போதும் போதிய துணைக்கருவிகளின்மை மற்றும் விஷேட கல்விக்கான ஆசிரியர்களிற்கான பற்றாக்குறை என்பன விஷேட தேவையுள்ள மாணவர்கள் பொதுக் கல்வி முறையில் இருந்து ஒதுக்கப்படுவதிற்கு ஒரு மறைமுக காரணமாக அமைந்துள்ளது.
தொழிற் சந்தையில் பங்குபற்றுதலைப் பொருத்தவரை அரச தொழில் வாய்ப்புக்களில் 3மூ விஷேட தேவையுடையவர்களிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நியதி கட்டாயப்படுத்தப்பட்டது. எனினும் தேசிய விஷேட தேவையுடையோரிற்கான கொள்கையின் கூற்றுப்படி இவ் ஒதுக்கீடு மிகக் குறைவாகவே பயன்பாட்டிற்குற்படுத்தப்பட்டுள்ளது.
4. அரசியல் மற்றும் தனியார் வாழ்வில் ஈடுபடுவதற்கான சுதந்திரம்
CPRD, அதில் கைச்சாத்திடும் நாடுகள் விஷேட தேவையுடையவர்களின் பொது வாழ்வில் அவர்களது அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தியுள்ளது (உறுப்புரை 29, CPRD).
இலங்கையில், விஷேட தேவையுடையவர்கள் அரசியலில் பங்கேற்பதற்கு சட்ட ரீதியான எவ்வித தடையும் இல்லை. இருந்த போதும் நிலவும் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறைகள் விஷேட தேவையுடையவர்கள் செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவதிற்கு தடையாகவே உள்ளது. தேர்தல் நிலையங்களை அணுகுவதில் உள்ள சிக்கல், பெரிய எழுத்துக்களிலான தேர்தல் பத்திரங்கள் காணப்படாமை மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்மை போன்றன அவர்கள் எதிர்நோக்கும் சில மறைமுகமான தடைகளிற்கு உதாரணங்களாகும்.
ஆகவே, மேற்கூறப்பட்ட ஆய்வின்படி இலங்கையின் சட்ட மற்றும் கொள்கைத் திட்டங்கள் CPRD இனால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறியுள்ளது. இந் நிலையில் சர்வதேச ரீதியாக கைச்சாத்திடப்பட்ட கடமைப்பாட்டை நிறைவு செய்ய விஷேட தேவையுடையோரின் உரிமைகளை சீர்திருத்தம் செய்யும் பணியிற்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.